குகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு | தினகரன்


குகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு

குகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு-2 Bodies Found with a Dog's Dead Body-Ragala Cave

 

குகை ஒன்றுக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடன் சென்ற நாயும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (16) காலை 9.30 மணியளவில், ராகலை, சென்லெனாடி மேற் பிரிவிலுள்ள அடர்ந்த காட்டிலுள்ள குகையொன்றில் இருவர் சடலமாக காணப்படுவதாக, ராகலை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

சென்லெனாடி தோட்டம், ராகலையைச் சேர்ந்த, 31 வயதான, செல்லைய்யா அசோக் குமார் மற்றும் ஹல்கிரன்ஓயா, கனிகா பிரிவு மெதவத்தையைச் சேர்ந்த 29 வயதான மகேஸ்வரன் ரத்னேஷ்வரம் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றைய தினம் (15) வேட்டைக்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், குகை ஒன்றினுள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சென்ற நாய் ஒன்றும் அக்குகையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள், முள்ளம் பன்றி வேட்டைக்காக, குறித்த குகையினுள் புகையை செலுத்தி, பின்னர் குகையினுள் சென்ற நிலையில், இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக,  பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சடலங்கள், வலப்பனை நீதவானினால் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, ராகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...