பாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு | தினகரன்

பாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு

பாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு-Wasp Attack-20 Students Injured

 

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா, சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு-Wasp Attack-20 Students Injured

இன்று (14) பிற்பகல் 12.30 மணியளவில் பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு-Wasp Attack-20 Students Injured

தரம் 6,7,8 மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு-Wasp Attack-20 Students Injured

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 


Add new comment

Or log in with...