இரு துப்பாக்கிச்சூட்டு கொலை சம்பவம்; கடற்படை வீரர் கைது | தினகரன்


இரு துப்பாக்கிச்சூட்டு கொலை சம்பவம்; கடற்படை வீரர் கைது

இரு துப்பாக்கிச்சூட்டு கொலை சந்தேகநபர் கைது-24 Yr Old Arrested-2 Shooting Incident Main Suspect

சந்தேகநபர் கடற்படையிலிருந்து தப்பிச் சென்றவர்

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (15) முற்பகல் 11.30 மணியளவில், வெல்லம்பிட்டியில் வைத்து, கொழும்பு குற்றப் பிரிவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

24 வயதான குறித்த சந்தேகநபர், கோலன்வத்தை, அஹுங்கல்ல மற்றும் ஹொரகெலேவத்த வீதி, இஹலகொஸ்வாடிய, மஹவெவ ஆகிய இரு முகவரிகளில் வசிக்கும், கலுஹத் மதுஷான் ஆப்ரேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர், வெல்லம்பிட்டி, கோத்தமி வீதியில் வைத்து, கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர  தெரிவித்தார்.

சந்தேகநபர், கடந்த ஜூலை 08 ஆம் திகதி, கடற்கரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஜம்பட்டா வீதியில் வைத்து, கணவன் - மனைவி ஆகிய இருவரை சுட்டுக் கொன்றதோடு, மேலும் இருவரை காயப்படுத்தியிருந்த சம்பவத்துடனும், கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி,  மோதறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவெல்ல வீதியில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடனும் தொடர்புபட்டவராவார்.

இரு சம்பவங்களிலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் இவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதோடு, கடற்படையிலிருந்து தப்பிச்சென்ற கடற்படை வீரர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்படும்போது, அவரிடம், 1.60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதோடு, சந்தேகநபர் பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபரை, நாளையதினம் (16) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...