வாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம் | தினகரன்

வாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்

வாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்-Puthukkudiyiruppu Shooting-Sword Attack-University Student Killed

 

புதுக்குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி மருதங்குளம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு வீடுபுகுந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிசூட்டில் காயமடைந்த புதுக்குடியிருப்பு இளைஞன் நேற்று (13) பிற்பகல் அநுராதபுரம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

வாள்வெட்டில் ஈடுபட்ட துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்-Puthukkudiyiruppu Shooting-Sword Attack-University Student Killed

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பிரதேசத்தைச்சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

மாணிக்கபுரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் யுவதி ஒருவரை காதலித்து திருமணம்செய்து வந்துள்ளார்  குறித்த யுவதி ஏற்கனவே மருதமடுகுளம் பகுதியை சேர்ந்த செ. கோபிநாத் என்ற இளைஞனை காதலித்துள்ளார்.

வாள்வெட்டில் ஈடுபட்ட துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்-Puthukkudiyiruppu Shooting-Sword Attack-University Student Killed

குறித்த இளைஞன் முன்னாள் காதலியுடன் இருந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். கோபிநாத்தின் முன்னாள் காதலியை திருமணம் செய்துள்ள மாணிக்கபுரத்தைச் சேர்ந்த இளைஞன் குறித்த படத்திதை அகற்றும்மாறு வற்புறுத்தி வந்துள்ளதுடன் வாய்த் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

மாணிக்கபுரத்தைச் சேர்ந்த திருமணமான இளைஞனின் நண்பர்கள் ஒன்றிணைந்து மருதமடுகுளம் பகுதியினை சேர்ந்த செ.கோபிநாத் என்ற இளைஞனின் வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு வாள்களுடன் சென்று முதலில் வீட்டின் வெளியில் உறங்கிக்கொண்டிருந்த 21 அகவையுடைய கோபிநாத் மீது வாள்வெட்டு நிகழத்திவிட்டு பின்னர் அவரது தந்தையான 45 அகவையுடைய செல்வக்குமார் மீதும் வாள்வெட்டிவிட்டு வீட்டுக்குள் புகுந்த நபர்கள் தயாரான 43 அகவையுடைய செ. குசேலகுமாரிமீதும் வாளால் வெட்டியுள்ளார்கள்.

வாள்வெட்டில் ஈடுபட்ட துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்-Puthukkudiyiruppu Shooting-Sword Attack-University Student Killed

இதன்போது வீட்டில் இருந்த பெண் பிள்ளைகள் இருவரும் வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளதால் அவர்கள் தப்பித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவு வேளை நடைபெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் உள்ள நாட்டு துப்பாக்கியினை எடுத்து வாள்வெட்டு கும்பல் மீது சுட்டுள்ளார்கள். இதில் வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டில் ஈடுபட்ட துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்-Puthukkudiyiruppu Shooting-Sword Attack-University Student Killed

அதனையடுத்து, குறித்த நபரை அங்கிருந்து சிறிது தூரம் இழுத்து சென்ற ஏனைய ஜந்து பேரும், அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

இச்சம்பவத்தினை தொடர்நது கிராம மக்களால் பொலிசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் காயமடைந்த நால்வரையும் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார்கள்.

துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான இளைஞன் மாவட்ட மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பத்தினை சேர்ந்த மூவரும் மாவட்ட மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தந்தையான செல்வக்குமார் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

இன்னிலையில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காக 02 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 28 அகவையுடைய திருச்செல்வம் கபிலன் எனும் இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று (13) உயிரிழந்துள்ளார்.

இவர் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

அவர்களில் முதன்மை சூத்திரராதியான மாணிக்கபுரத்தைச் சேர்ந்த 22 அகவையுடைய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவருவம், 22 அகவையுடை ஆனந்தபுரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் மற்றுமொருவரும் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த  கும்பலை சேர்ந்த ஒருவரை கைதுசெய்ய பொலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு யார் நடத்தினார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த பொலீசார் வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதினால் அவர்களிடம் வாக்கமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன்)
(மாங்குளம் குருப் நிருபர் - தவசீலன் ஷண்முகம்)
 

Add new comment

Or log in with...