மஸ்கெலியாவில் 20 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர் | தினகரன்

மஸ்கெலியாவில் 20 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர்

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகினர். இவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் தரம் 6,7,8 வகுப்புகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...