அமெரிக்காவை தாக்க வரும் சூறாவளி: பேரழிவு அச்சுறுத்தல் | தினகரன்

அமெரிக்காவை தாக்க வரும் சூறாவளி: பேரழிவு அச்சுறுத்தல்

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நெருங்கியுள்ள புளோரன்ஸ் சூறாவளி பலமிழந்தபோதும் தொடர்ந்து பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 17 இலட்சம் மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் மற்றும் புயல் காற்றை எதிர்கொள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...