குடிபோதையில் கார் ஓட்டிய பிரான்ஸ் தலைவருக்கு 20 மாதம் தடை: 50 பவுண் அபராதம் | தினகரன்

குடிபோதையில் கார் ஓட்டிய பிரான்ஸ் தலைவருக்கு 20 மாதம் தடை: 50 பவுண் அபராதம்

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் பிரான்ஸ் கால்பந்து அணி தலைவர் லோரிஸ்க்கு 20 மாத தடை மற்றும் 50 ஆயிரம் பவுண் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவராக இருப்பவர் ஹியூகோ லோரிஸ். கோல்காப்பபளராக இருக்கும் இவரது தலைமையில் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் பிரான்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது. இவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் திகதி அதிகாலை குடித்து விட்டு கார் ஓட்டினார். மத்திய லண்டனில் 2.20 மணிக்கு பொலிஸார் இவரது காரை நிறுத்தினார்கள். அப்போது குடித்துவிட்டு கார் ஓட்டியது சோதனையில் தெரிய வந்தது. இதனால் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 7 மணி நேரம் காவலில் இருந்தார். பின்னர் பினையில் வெளியிடப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...