ரவிசாஸ்திரிக்கு 3 மாதத்தில் ரூ.2.05 கோடி சம்பளம் | தினகரன்

ரவிசாஸ்திரிக்கு 3 மாதத்தில் ரூ.2.05 கோடி சம்பளம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பள முற்பணமாக கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

வீரர்களின் செயற்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலகட்டத்துக்ெகன ரூ.2.05 கோடி சம்பள முற்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.

தலைவர் விராட்கோலிக்கு தென்ஆபிரிக்கா சுற்றுப்பயண சம்பளம் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளமும் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி என கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...