ஆசியாவை கேந்திரமாக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு 'ஆசியானுக்கு' உண்டு | தினகரன்


ஆசியாவை கேந்திரமாக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு 'ஆசியானுக்கு' உண்டு

பிரதமர் ரணில்

ஆசியாவை கேந்திரமாகக்கொண்டு அடுத்து வரும் சில தசாப்தங்களுக்குள் புதிய உலகப் பொருளாதாரக் கட்டமைப்பை கட்டி எழுப்பும் பொறுப்பு ஆசியான் அமைப்புக்கும்,ஆசிய பொரு ளாதார வல்லுநர்களுக்கும் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வியட்நாம் ஹனோய் நகரில் நடைபெற்றுவரும் ஆசியான் உலக வர்த்தக மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

"ஆசிய புவிசார் அரசியல் வடிவம்" எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாட்டில்

உரையாற்றிய பிரதமர் ஆசியப்பிராந்திய நாடுகளின் அரசியல் போக்குகள் குறித்து கவனம் செலுத்துவது பற்றியும் சுட்டிக்காட்டினார். ரணில்விக்கிரமசிங்க இங்கு மேலும் தெரிவித்ததாவது:

ஆசிய பொருளாதாரத்தின் எதிர்காலம் இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கப்பற் போக்கு வரத்திலே தங்கியுள்ளது. பிராந்திய அரசுகளும், இந்து சமுத்திர கடல்வலயத்தை பயன்படுத் துவோரும், ஒன்றுபட்டு இணக்கப்பாட்டுடன் சுயாதீனமான கடல்கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

புதிய பொருளாதார கோட்பாடுகளுக்கு மத்தியில் ஆசிய பிராந்தியம் எதிர்நோக்கும் சவால்கள், அச்சுறுத்தல்களை வெற்றிகொள்வதற்கான கூட்டுச் செயற்பாடுகள் குறித்தும் இவ்வமர்வில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இக்கலந்துரையாடலை சிங்கப்பூர் ‘செனல் நியூஸ் ஆசியா” நிறுவனத்தின் சார்பில் ஜூலி யோ (Julie Yoo) தொகுத்தளித்தார்.

வியட்நாம் பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான பாம் பின் மின், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கங் கியுங் வா, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரா சோனோ மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆசிய ஆய்வுக் கல்வி குறித்த சர்வதேச நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி லின் குக் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

வியட்நாமிலிருந்து விசு கருணாநிதி

 


Add new comment

Or log in with...