வட கிழக்கு சிரியாவிலிருந்து ஐ.எஸ்ஸை அழிக்க தாக்குதல் | தினகரன்

வட கிழக்கு சிரியாவிலிருந்து ஐ.எஸ்ஸை அழிக்க தாக்குதல்

வட கிழக்கு சிரியாவில் இருந்து இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவை முற்றாக அழிக்கும் படை நடவடிக்கை ஒன்றின் கடைசிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அமெரிக்க ஆதரவு போராளிகள் கூட்டணி ஒன்று அறிவித்துள்ளது.

மத்திய யூப்ரடிஸ் நதிப் பள்ளத்தாக்கு நகரான ஹாஜியில் நிலைகொண்டிருக்கும் ஜிஹாதிக்களுக்கு எதிராக சிரிய ஜனநாயக படை கடந்த திங்கட்கிழமை தரைவழி தாக்குதல் ஒன்றை ஆரம்பித்துள்ளது. குர்திஷ் மற்றும் அரபு போராளிகளைக் கொண்ட இந்த கூட்டணி இங்கு கடினமான மோதல் ஒன்றை எதிர்பார்த்துள்ளது.

சிரியாவில் தொடர்ந்து 14,000 ஐ.எஸ் போராளிகள் இருப்பதாக அமெரிக்கா கணித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக்குடனான எல்லையில் கிழக்காக யூப்ரடிஸ் நதியை ஒட்டி நிலைகொண்டுள்ளனர். எனினும் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதியின் பாலைவனப் பிரதேசங்களில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக சிரிய அரச படை போராடி வருகிறது.

மறுபுறம் 15,500 தொடக்கம் 17,100 ஐ.எஸ் உறுப்பினர்கள் ஈராக்கில் நிலைகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியில் தலைமறைவாக உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தனது கலீபத்தின் உச்சத்தில் இருந்தபோது 7.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய பிரிட்டன் நாட்டின் அளவான நிலப்பரப்பில் ஆட்சி புரிந்தது.


Add new comment

Or log in with...