அமெரிக்காவை அச்சுறுத்தும் சூறாவளி | தினகரன்

அமெரிக்காவை அச்சுறுத்தும் சூறாவளி

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்களில் கடந்த 3 தசாப்தங்களில் ஏற்பட்ட சூறாவளிகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் புளோரன்ஸ் சூறாவளி வலுப்பெறும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதன்போது மணிக்கு 140 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...