குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்காவுக்கு பதிலடி | தினகரன்

குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்காவுக்கு பதிலடி

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்படப்போவதில்லை என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் இழைத்த யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த எதிர்பார்த்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்கா விடுத்திருக்கும் கடுமையான எச்சரிக்கைக்கு கோபத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், தமது பிரஜைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மீது தடை விதிப்பது குறித்தும் அவர் எச்சரித்திருந்தார்.

எனினும் இந்த அச்சுறுத்தலை உதறிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், “மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது தொடக்கம் அமெரிக்கா அதனை விமர்சித்து வருவதோடு அதில் இணையாத பல டஜன் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.

இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் இந்த நீதிமன்றம் விசாரணை நடத்தும்.


Add new comment

Or log in with...