பிரேசில் ஜனாதிபதி தேர்தல்: விலகிக் கொண்டார் லூலா | தினகரன்


பிரேசில் ஜனாதிபதி தேர்தல்: விலகிக் கொண்டார் லூலா

பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தனது இடத்திற்கு மற்றொருவரை போட்டியிட வழிவிட்டு முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா விலகிக் கொண்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளராக இருந்த லூலா, தேர்தலில் போட்டியிடுவதை நீதிமன்றம் தடுத்தது.

இந்நிலையில் அவர் தனது தொழிலாளர் கட்சியின் சகாவான பெர்னாண்டோ ஹடட் போட்டியில் குதிக்க வழிவிட்டுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் தீவிர வலதுசாரி வேட்பாளர் பேரணி ஒன்றின்போது கத்திக்குத்து இலக்கான நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலுக்கு இலக்கான 63 வயது ஜயிர் பொல்சனோரோ தீவிர சத்திர சிகிச்சை ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளார். எனினும் தனிப்பட்ட பகை காரணமாகவே அவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

72 வயதான லூலா டி சில்வா 2003 தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை பிரேசிலில் இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக பதிவி வகித்துள்ளார்.


Add new comment

Or log in with...