வேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு ‍களுத்துறை நகர சபை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானம் | தினகரன்

வேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு ‍களுத்துறை நகர சபை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானம்

களுத்துறை வேர்னண் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கு மற்றும் பூங்கா (பார்க்) விளையாட்டு மைதானத்தை களுத்துறை நகர சபை முழு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் கொண்டு வந்து களுத்துறை நகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது மக்கள் மற்றும் சகல துறை விளையாட்டு வீர வீராங்கனைகளினதும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பாவனைக்காக திறந்து விடவும் ஆலோசனை.

முன்னாள் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தில் உயர் பதவி வகித்த பெரும் புள்ளி ஒருவர் காலஞ்சென்ற முன்னாள் களுத்துறை நகர சபை தவிசாளருடன் செய்து கொண்ட முறையற்ற ஒப்பந்த, உடன்படிக்கையுடன் மேற்பார்வையில் உள்ளதும், தற்போதைய நிர்வாக சர்ச்சைக்கு உரியதுமான களுத்துறை வேர்ணன் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கின் முறையற்ற ஒப்பந்தத்தை இரத்து செய்வதுடன் வேர்னண் யூ பெர்ணான்டோ என்ற பெயரிலேயே எவ்வித பெயர் மாற்றங்களும் இன்றி

நகர சபை பார்க் விளையாட்டு மைதானத்தையும் இணைத்து மீண்டும் களுத்துறை நகர சபை முழு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சம்பந்தமாக களுத்துறை நகர சபை மாதாந்த ஒன்று கூடலில் கடும் வாத விவாதங்களின் பின்னர் நகர சபை உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் 11பேர் ஆலோசனைக்கு சார்பாக வாக்களித்ததுடன் 06 பேர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர். மற்றும் இருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது சபையில் இருந்து வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

களுத்துறை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...