நோ நேம் கரப்பந்துக் கிண்ணம் நிந்தவூர் ஷீல்ட் அணி வசமாகியது | தினகரன்

நோ நேம் கரப்பந்துக் கிண்ணம் நிந்தவூர் ஷீல்ட் அணி வசமாகியது

நிந்தவூர் நோ நேம் கரப்பந்து விளையாட்டுக் கழகம் நடாத்திய நோ நேம் கரப்பந்துக் கிண்ணம் 2018 மின்னொளியில் இறுதிப்போட்டி அண்மையில் அஹமட் சதுக்கத்தில் இடம்பெற்றது.

இதில் அக்கரைப்பற்று றஹீமிய்யா மற்றும் நிந்தவூர் ஷீல்ட் ஆகிய அணிகள் மோதியதில் நிந்தவூர் ஷீல்ட் அணி 11-−03 , 11-−05 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.

இதில் இரண்டாம் இடத்தினைப்பெற்ற அணிக்கு 5000 ரூபாவும், வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வெற்றி பெற்ற அணிக்கு 10000 ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் இறுதிப்போட்டிற்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.அஸ்பர், பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எல். றபீக், வர்த்தகர்களான யு.கே. முபீத், வை. றிபாட் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...