நற்பிட்டிமுனை விளையாட்டு கழகம் சம்பியன் | தினகரன்

நற்பிட்டிமுனை விளையாட்டு கழகம் சம்பியன்

நாவிதன்வெளி பிரண்ஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் நற்பிட்டிமுனை விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இப்போட்டி அணிக்கு 11பேர் கொண்ட 6ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இறுதி சுற்றுக்கு நற்பிட்டிமுனை விளையாட்டுக் கழகமும், சம்மாந்துறை ரியல் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இறுதிசுற்றுக்கு தெரிவானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நற்பிட்டிமுனை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 6ஒவர் நிறைவில் 4விக்கட்களை இழந்து 51ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை ரியல் ஸ்டார் விளையாட்டுக்கழகம் 8விக்கட்களை இழந்து 6ஓவர் நிறைவில் 30 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த தொடர் ஆட்டநாயகன் விருதை நற்பிட்டிமுனை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் ஏ.எம்.பஸ்லூன், சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை நற்பிட்டிமுனை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் எம்.சீ.எம்.சுஹாஸ் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வு நாவிதன்வெளி பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வீ.சுதாகரன் தலைமையில் சொறிக்கல்முனை, 6ஆம் கொளனி அல்-தாஜ்ஜூன் பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதர்சன், சவளக்கடை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் என்.சந்திரகுமார், அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எல்.பைசாத், ஆசிரியர் எம்.எச்.கபீர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சவளக்கடை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...