Friday, March 29, 2024
Home » கொக்குத்தொடுவாய் அகழ்வு பணியின் 2 ஆம் கட்டம் இன்றுடன் நிறுத்தம்

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணியின் 2 ஆம் கட்டம் இன்றுடன் நிறுத்தம்

- மீண்டும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பம்

by Prashahini
November 29, 2023 12:40 pm 0 comment

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28) வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எவ்வளவு தூரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஸ்கேன் பரிசோதனை ஊடாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதிப்பக்கமாக ஏற்கனவே அகழ்வுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மேலதிகமாக 1.7 மீற்றர் வரை செல்வதாகவும் அகலமாக 3 மீற்றர் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, அகழப்பட்ட குழியில் இருக்கின்ற உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் இந்த அகழ்வு பணியின் இரண்டாம் கட்டம் நிறுத்தப்பட இருக்கின்றது.

மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ள உடற்பாகங்களை மீட்பதற்காக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT