அம்பாறை, மட்டக்களப்பு, ஊவாவில் பிற்பகலில் மழை | தினகரன்

அம்பாறை, மட்டக்களப்பு, ஊவாவில் பிற்பகலில் மழை

அம்பாறை, மட்டக்களப்பு, ஊவாவில் மழை-Weather-Rain in Ampara-Batticalao-13-09-2018

 

வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் மற்றும் ஊவா, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் ஓரளவான மழை பெய்யலாம் எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச்சூழவுள்ள கடற்பரப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...