எரிட்ரிய–எத்தியோப்பிய எல்லை 20 ஆண்டுகளின் பின் திறப்பு | தினகரன்


எரிட்ரிய–எத்தியோப்பிய எல்லை 20 ஆண்டுகளின் பின் திறப்பு

பரம எதிரிகளாக இருந்த எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியாவுக்கு இடையில் 20 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட முக்கிய எல்லைக் கடவை ஒன்று நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. வடக்காக எத்தியோப்பிய நகர் சலம்பெசாவில் அமைந்திருக்கும் இந்த எல்லைக் கடவை இரு நாடுகளையும் தொடர்புபடுத்தும் பிரதான வீதியாக உள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சுமுகமடைந்துவரும் நிலையில் இந்த எல்லைக் கடவை திறக்கும் நிகழ்வை இரு நாட்டு தலைவர்களும் நேராக பார்வையிட்டனர். கடந்த ஜூலையில் எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியாவுக்கு இடையே இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதே எல்லைக் கடவையில் 1998 ஆம் அண்டு மே மாதம் ஆரம்பமான எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியாவுக்கு இடையிலான யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டு அல்ஜீரிய உடன்படிக்கையுடன் இந்த யுத்தம் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலை ஏற்படவில்லை.


Add new comment

Or log in with...