சவூதியில் பெண்ணுடன் உணவு உட்கொண்டதற்கு ஆண் கைது | தினகரன்


சவூதியில் பெண்ணுடன் உணவு உட்கொண்டதற்கு ஆண் கைது

எகிப்து நாட்டவர் ஒருவர் சவூதி அரேபியாவில் பெண் ஒருவருடன் காலை உணவு உட்கொள்ளும் வீடியோ ஒன்று ட்விட்டரில் பிரபலமானதை அடுத்து அந்த எகிப்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி பெண் என கருதப்படும் முகத்தை மறைத்திருக்கும் அந்த பெண்ணுக்கு அருகில் இருந்து எகிப்து நாட்டவர் உணவு உட்கொள்வது அந்த வீடியோவில் தெரிகிறது.

எனினும் தொழில் இடங்கள் அல்லது உணவகங்களில் குடும்பங்கள் மற்றும் தனி ஆண்கள் உணவு உட்கொள்வதற்கு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இது சவூதி சட்டத்தை மீறுவதாக உள்ளது.

இந்நிலையில் சவூதி தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் கைது செய்யப்பட்டிருக்கும் எகிப்து நாட்டவர் மீது பல விதி மீறல்களில் ஈபட்டதாகவும் சவூதியருக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடத்தை பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ட்விட்டரில் 113,000 தடவைகள் பகிரப்பட்டிருக்கும் நிலையில் இது கலாசார பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் அந்நாட்டின் சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...