எரிபொருள் விலை அதிகரிப்பு; மீள் பரிசீலனை செய்ய வேண்டும் | தினகரன்


எரிபொருள் விலை அதிகரிப்பு; மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி தலையிட்டு மறுபரிசீலனை செய்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோல், டீசல் விலையை அதிகரிப்பு தொடர்பாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு

தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் கருதாது தொடர்ந்து இவ்வாறான விலை அதிகரிப்பை அரசு மேற்கொள்ளுமேயானால் அனைத்து பெற்றோல் நிரப்பு நிலையங்களும் முற்றுகையிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அறிக்ைகயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசு தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்களது நலன் குறித்து வாழ்வாதாரம் குறித்தும் முதலில் கவனமெடுத்து செயற்படவேண்டும் அதைவிடுத்து இவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமேயானால் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதுடன் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அரசின் வரையறையின்றிய இச் செயற்பாட்டால் மக்களின் நாளாந்த வாழ்வாதாரமும், போக்குவரத்தும் நேரடியாக பெரிதும் பாதிக்கப்படுவதுடன், இப் பெற்றோல், டீசல் விலைஅதிகரிப்பினால் மறைமுகமாக உணவுவிலைகள், கட்டிடப்பொருட்களின் விலைகள், சுகாதாரம், மூலப்பொருட்கள்,போக்குவரத்து எனஅனைத்திலும் விலைகள் தானாகவே அதிகரிக்கக்கூடும். மேலும் பாடசாலைமாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் ,குறிப்பாக அவர்களது மாதாந்த பருவசீட்டின் பெறுமதியும் அதிகரிக்கக் கூடும் அத்துடன் அன்றாட பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பாரியதொரு பிரச்சினையாகவும் இது அமைந்துள்ளது.

போக்குவரத்துடன் இனைந்த சேவைகளாகவே அனைத்தும் நாளாந்த நடவடிக்கைகளும் காணப்படுகின்றது இவ்வாறான நிலையில் ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைஅதிகரிக்கக்கூடும்.

கடந்த மாதங்களில் விலை அதிகரிப்பானது வரையறையின்றி இருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அரசு நினைத்தல் போல் விலை அதிகரிப்பை மேற்கொண்டுவருகின்றது யாரை கேட்டு இவ் விலைவாசியை அரசு அதிகரிக்கின்றது? மக்களின் கருத்திற்கு அரசு செவிசாய்க்க வேண்டும், மக்கள் எவரும் அடிமைகள் கிடையாது, தேர்தல் காலங்களில் மட்டும் பொருட்களின் விலைவாசியை அரசுகுறைப்பதுடன் தேர்தல் முடிவடைந்தவுடன் பலமுறை விலைவாசியை உயத்துவதுமாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் ஏழை மக்களை ஏமாற்றுவதாக காணப்படுகின்றது.

அரசாங்கம் இது குறித்து உடனடியாக மறுபரிசீலனை செய்தாகவேண்டும். பெற்றோல் ,டீசல் விலைஅதிகரிப்பானது ஏனைய அத்தியாவசிய உணவு விலைகள் அதிகரிப்பதற்கு உத்தேச காரணியாக அமையும்.

எம் நாட்டைப் பொறுத்தவரையில் இறக்குமதி பொருளாதாரமே கூடுதலாக காணப்படுகின்றது. இதனால் அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைவாசியும் உயர்வடையும். இன்று தோட்டத் தொழிலாளர்களின் நிலையை கருத்திற்கொள்வோமேயானால் அவர்கள் பெரிதும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

அரசாங்கம் இன்று வீடுகள் கட்டிதருவதாக வீடுகளை விட அதிக விளம்பரங்களை செய்து வருகின்றன, ஆனால் அவ் வீட்டில் 03 வேளை நிம்மதியாக சாப்பிடக் கூடியநிலை இல்லாதிருக்கும் நிலைக்கு அரசாங்கம் மக்களை தள்ளிவருகின்றது.

மக்கள் உழைப்பது முதல் காரணம் தாம் மூன்று வேளை தானும் தன் குடுப்பமும் நிம்மதியாக சாப்பிட்டு வாழ்வதற்கே அவ் விடயமே கேள் விக் குறியாககாணக் கூடியதாவுள்ளது.

இவ்வாறான நிலைமை தொடந்தும் நீடிக்குமேயானால் இவ் விலை அதிகரிப்பு எதிராக நாம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும். இது குறித்து ஜனாதிபதி தலையிட்டு மறுபரிசீலனை செய்துமக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்றநிலையில் வழிகளை மேற்கொள்ள வேண்டும். என ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் வலியுறுத்திவந்தார்.

 


Add new comment

Or log in with...