Thursday, March 28, 2024
Home » தாய்லாந்து பாராளுமன்றின் Loy Krathong நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

தாய்லாந்து பாராளுமன்றின் Loy Krathong நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 11:58 am 0 comment

தாய்லாந்து சபாநாயகரின் அழைப்பின் பேரில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற Loy Krathong நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற 2023 Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தாய்லாந்து சபாநாயகர், செனட் தலைவர், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு Loy Krathong வாழ்த்துகளை செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT