அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள பலஸ்தீன விடுதலை அமைப்பின் (பீ.எல்.ஓ) அலுவலகத்தை மூட அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவில் உள்ள பலஸ்தீன தூதரகத்தை மூட தீர்மானித்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரிடம் இருந்து எமக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது” என்று பீ.எல்.ஓவின் பொதுச் செயலாளர் சயேப் எரகத் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான, சுகாதார மற்றும் கல்விக்கான நிதியுதவிகளை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் பலஸ்தீன மக்களை கூட்டாக தண்டிக்கும் மற்றொரு நடவடிக்கை இதுவென்று அவர் குறிப்பிட்டார்.
ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது தொடக்கம் அமெரிக்காவுடனான தொடர்புகளை பலஸ்தீன தலைமைகள் துண்டித்து வருகின்றன.
ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி 25 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையிலேயே அமெரிக்க நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
Add new comment