சுவீடன் தேர்தலில் பிரதான கட்சிகள் சமனான வாக்கு | தினகரன்


சுவீடன் தேர்தலில் பிரதான கட்சிகள் சமனான வாக்கு

சுவீடன் நாட்டு பொதுத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் சம அளவான வாக்குகளை வென்றிருப்பதோடு, குடியேற்ற எதிர்ப்புக் கட்சி முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் மைய இடதுசாரி கூட்டணி தனது போட்டி தரப்பான மைய வலதுசாரி கூட்டணியை விடவும் குறுகிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றபோதும் இரு தரப்பும் சுமார் 40 வீத வாக்குகளை வென்றுள்ளன.

தேசியவாத சுவீடன் ஜனநாயகவாதிகள் கட்சி கடந்த தேர்தலில் 12.9 வீத வாக்குகளை வென்ற நிலையில் இம்முறை 18 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் தேசியவாத கட்சியுடன் கூட்டணி சேர்வதை நிராகரித்திருக்கும் நிலையில் ஏனைய அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி ஒன்றுக்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளன.

எனினும் அண்மைய ஆண்டுகளில் ஐரோப்பா எங்கும் குடியேற்ற எதிர்ப்பு கட்சிகள் அதிக முன்னேற்றம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசியவாத சுவீடன் ஜனநாயகவாதிகள் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது.


Add new comment

Or log in with...