கொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா | தினகரன்

கொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா

கொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா இம் மதம் 16ம் திகதி கல்லூரி மைதானத்தில் காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளது

இப் பொட்டியில் கிரிக்கெட் போட்டி , ரக்பி போட்டி, கால்பந்தாட்ட போட்டி, 90 வது குழு மற்றும் பழைய மாணவர்கள் இடையிலான உதைபந்தாடட போட்டி, கல்லூரி மாணவர்களின் கராட்டி போட்டி மற்றும் குழந்தைகளுக்கான வேடிக்கை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என பத்திரிகையாளர் மகாநாட்டில் 90 வது குழு தலைவர் எம். ஆர். ஏ ரசாக் தெரிவித்தார்.

பிரதான அனுசரணை எம்எச் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் , சில்வர் ஸ்பான்சர் கோசோனிக் லங்கா பிரைவேட் லிமிட்டட் மற்றும் வெண்கல ஸ்பான்ஸர் ஜெனியஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் அனுசரணை ஊடக மாநாட்டில் தமது ஆதரவை வழங்கினார்கள்

கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், 90வது குழு தலைவர் எம். ஆர். .ஏ. ரசாக் மற்றும் திட்டத் தலைவர் முகம்மத் மிஹன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை விசேட அம்சமாகும்.

பழைய மாணவர்களினால் 25 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்களை எதிர்காலங்களில் சேகரித்து வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளததாகவும் ஏற்பாட்டுக்குழுவினர்கள் இதன் போது கருத்து தெரிவித்தனர்.முதற்கட்டமாக 1000 புத்தங்களை இந்த விளையாட்டு களியாட்ட நிகழ்வில் கிடைக்கும் நிதியை கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வழங்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ருஸைக் பாரூக்


Add new comment

Or log in with...