நடுவருடன் வாக்குவாதம்: செரீனாவுக்கு 17 ஆயிரம் டொலர் அபராதம் | தினகரன்

நடுவருடன் வாக்குவாதம்: செரீனாவுக்கு 17 ஆயிரம் டொலர் அபராதம்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் 17 ஆயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-–2, 6-–4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்றார்.

இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்ட நுணுக்கம் பற்றி விபரித்தார்.

ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சலம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரீனாவின் புள்ளியை குறைத்தார்.

3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

இந்நிலையில், செரீனாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர், பயிற்சியாளர் சைகை செய்ததற்கு 4 ஆயிரம் அமெரிக்க டொலர், டென்னிஸ் ராக்கெட்டை வீசியதற்கு 3 ஆயிரம் அமெரிக்க டொலர் என மொத்தம் 17 ஆயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக 1.85 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...