எல்லை நிர்ணய அறிக்ைகயை அனைவரும் தோற்கடித்த விந்தை! | தினகரன்


எல்லை நிர்ணய அறிக்ைகயை அனைவரும் தோற்கடித்த விந்தை!

எல்லை நிர்ணயம் ​தொடர்பான அறிக்கை வெளிவந்த போது ஆரம்பத்தில் அனைத்துக் கட்சிகளும் அதற்கு அர்ப்பணிப்பைச் செய்திருந்ததாகவே தோன்றியது. ஆனால் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து அதனைத் தோற்கடித்தார்கள்.

இந்த அறிக்கை ஏன் இவ்வாறு தோல்வியடைந்தது? இந்தத் தோல்வி அரசாங்கத்தையும் மக்களையும் எவ்வாறு பாதிக்கின்றது? எல்லை நிர்ணயத்தின் அவசியம் என்ன? இவ்வாறான கேள்விகளுக்கு நிபுணர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:

பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான கல்வித் துறை பேராசிரியர் உபுல் அபேரத்ன இவ்வாறு கூறுகிறார்.

கேள்வி : யாரும் எதிர்பாராத வகையில் பாராளுமன்ற எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இது பற்றிய உங்களது கருத்தென்ன?

பதில் : எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்தமை இந்நாட்டின் அரசியல் தன்மையை மிக நன்றாக எடுத்துக் காட்டுகின்றது. ஒருபுறம் ஒருங்கிணைந்த எதிர்க் கட்சியினரின் உட்பூசல்களைத் தீர்ப்பதற்கு தேர்தலை தள்ளிப் போட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஜனாதிபதியும் தற்போது தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாரில்லை. பிரதமரும் தேர்தலுக்கு செல்ல விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை எவ்வளவு மக்கள் சார்பானதாக இருந்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : தேர்தலை தள்ளிப் போடுவதால் இவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என எண்ணுகின்றீர்களா?

பதில் : ஒருங்கிணைந்த தலைமை(மஹிந்த அணி)எல்லா சந்தர்ப்பங்களிலும் தவறான அரசியல் முடிவுகளையே எடுக்கின்றது. அவர்கள் தற்போது தேர்தலுக்கு முகங்கொடுத்திருந்தால் சில மாகாண சபைகளின் அதிகாரத்தையாவது கைப்பற்றியிருக்கலாம். ஆனால் அவர்களின் உட்பூசல்களுக்கு தீர்வு கிட்டும் வரை காலங்கடத்துவதாகத் தோன்றுகின்றது. அவர்களின் அரசியல் அதிகாரப் போட்டி காரணமாக இந்நாட்டு மக்களுக்கு அநியாயம் நடந்துள்ளதாகத் தோன்றுகின்றது. மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஒருபுறம் வைத்து விட்டு அரசியல்வாதிகள் அவரவர் அதிகாரப் போட்டியை நடத்துவதாகத் தெரிகின்றது. அவர்களுக்கு இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்த அக்கறையில்லை. அவர்கள் பணக்காரர்களாகும் எண்ணத்திலேயே அரசியலில் ஈடுபடுகின்றார்கள். அதனால் மக்களுக்குத் தேவையான எதுவும் அவர்களால் நிறைவேற்றப்படும் என எதிரபார்க்க முடியாது.

கேள்வி : ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி எண்ணவில்லை என்று இங்கே தோன்றுகின்றதா?

பதில் : பொது மக்களின் பணத்தை செலவழித்து எல்லை நிர்ணய குழு அறிக்கையை மக்களின் தேவைக்காகவும் வேண்டுகோளுக்காகவுமே தயாரித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் இடமுள்ளதா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலம் இந்நடவடிக்கைக்கு, பொதுமக்களுக்கு அவசியமானவை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுவதில்லை எனத் தெரிகின்றது. அவர்கள் அவர்களின் இருப்புக்காகவே நடவடிக்கையை மேற்கொள்கின்றார்கள் எனத் தெரிகின்றது. சட்டத்தரணி லஸந்த மனோஜ் நாணயக்கார கூறுகின்ற கருத்துகளை பார்ப்போம்.

கேள்வி : அரசாங்கம் கொண்டு வந்த எல்லை நிர்ணயக் குழு அறிக்கையை அவர்களே தோல்வியடையச் செய்துள்ளார்கள். இது பாரதூரமான செயல் அல்லவா?

பதில் : உண்மையில் இது பாரதூரமான செயலாகும். அரசாங்கத்தால் எல்லை நிர்ணயத்தை தீர்மானிக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆணைக்குழு அறிக்கையை தயாரித்த பின்னர் அதை முன்வைத்த அமைச்சரே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தான் கொண்டு வந்த அறிக்கைக்கு தானே எதிர்ப்புத் தெரிவித்தது சரித்திரத்திலேயே முதற் தடவையாகும். அதேபோல் பாராளுமன்றத்தில் அதிகமானோர் எதிர்ப்புத் தெரிவித்த, ஜனதா விமுக்தி பெரமுனவும் வாக்களிக்காதது போன்ற விடயங்களை ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடுத்த விடயம் என்னவென்றால் ஏன் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பதாகும். இதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

ஆணைக்குழு சிறந்ததுதான். ஆனால் தனது பேச்சுக்குக் கூட செவிசாய்க்கவில்லை என்று விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சரே கூறுகின்றார். அதிலிருந்து எங்கேயோ பிழை நடந்துள்ளது எனத் தெரிகின்றது. இவ்வாறான அறிக்கைகளைத் தயாரிக்கும் போது மக்கள் தொகையின் அடர்த்தி, இனங்களின் பரம்பல் என்பன குறித்து நன்கு ஆராய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பிரச்சினைகள் எழலாம்.

கேள்வி : தேர்தலை தள்ளிப் போட அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரம் இதுவென குற்றஞ்சாட்டப்படுகின்றதல்லவா?

பதில் : பார்க்கும் பார்வைக்கு அவ்வாறு தோன்றுவது இயற்கையே. ஆனால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் புதிய முறை அவசியமில்லை. தேவையிருந்தால் அனைவரும் இணைந்து பழைய முறையிலாவது இதனை நடத்தலாம். ஜனநாயக நாடொன்றில் தேர்தலை தள்ளிப் போடுவதால் பாதிப்படைவது அரசாங்கமேயாகும்.

கேள்வி : அறிக்கையை தயாரிக்க செலவிட்ட பணத்தின் சுமையும் இறுதியில் பொதுமக்களின் தோளின் மீதே சுமத்தப்படுகின்றதல்லவா?

பதில் : அவ்வறிக்கையை முற்றாக நிராகரித்தாலே அவ்வாறான நிலைமை ஏற்படும். சபாநாயகர் அவரது அதிகாரத்துக்கு அமைய பிரதமரின் தலைமையில் ஐந்து நபர்களடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளார். அந்தக் குழு இந்த அறிக்கையை வீசி விடாது அவர்கள் அதிலுள்ள குறைகளை அறிந்து திருத்தங்களை செய்து மீண்டும் அதனை முன்வைப்பார்கள். அதனால் பணம் விரயமானது எனக் கூற முடியாது.

கேள்வி : இந்த காரணத்துக்காக தேர்தலை தள்ளிப் போடுவதால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

பதில் : இந்த அரசாங்கம் தேர்தலை நடத்துவதில்லை என்று கூறுகின்றது. கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்தியது.

ஆனால் அவர்கள் துண்டு துண்டாக தேர்தலை நடத்தினார்கள். அதன் பலனை நாம் வடமேல் மாகாணத்தில் கண்டோம்.

என்னுடைய கருத்து என்னவென்றால் மாகாண சபைத் தேர்தலை ஒன்றாக நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தாத போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த அரசாங்கம் செய்ய வேண்டியது என்னவென்றால் மக்களுக்காக அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவதாகும்.

நுவன் கொடிகார...


Add new comment

Or log in with...