Home » Swedish Trading Company நடாத்திய “REIGNITE” வாடிக்கையாளர் தினம்: ஒத்துழைப்புடனான கூட்டுறவை வளர்க்கிறது

Swedish Trading Company நடாத்திய “REIGNITE” வாடிக்கையாளர் தினம்: ஒத்துழைப்புடனான கூட்டுறவை வளர்க்கிறது

by Rizwan Segu Mohideen
November 28, 2023 11:16 am 0 comment

புதிய தலைமுறை தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் எழுச்சி பெறும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிறுவனமான Swedish Trading Company, தனது “REIGNITE” என்ற வாடிக்கையாளர் தினத்தை, அண்மையில் நடத்தியது. “தொழில்துறைக்கு வலுவூட்டுவதில், பூமியை நிலைநிறுத்துதல்” (powering the industry, sustaining the planet) என்ற கருப்பொருளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

REIGNITE ஆனது, அதன் சகோதர நிறுவனங்களான General Sales Company மற்றும் Swedish Trading Audio Visual ஆகியவற்றுடன் இணைந்து Swedish Trading Company இன் மறுமலர்ச்சியை அடையாளப்படுத்தியது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொழில்துறை அனுபவத்தைக் கொண்ட புகழ்பெற்ற தொழிலதிபரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான சந்திர சேனாநாயக்கவினால் 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன. இப்போது அவரது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையின் தலைமைத்துவத்தின் கீழ் இக்குழுமம் ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதுடன், சவால் மற்றும் மாற்றத்தின் காலத்திற்குப் பிறகு சந்தைப் பங்கைக் கைப்பற்றுவதற்கு நிறுவனத்தைத் தூண்டியுள்ளது.

அதன்படி, இந்நிகழ்வின் நோக்கங்கள் பலதரப்பட்டவை மற்றும் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தன. காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பலன்களை அதிகரிக்கத் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைச் சித்தப்படுத்துவதன் மூலம், Swedish Trading Company, General Sales Company மற்றும் Swedish Trading Audio Visual ஆகியவை கூட்டுப் பங்காளித்துவத்தின் மூலம் நீடித்த வெற்றிக்கான அத்திவாரத்தை இடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்நிகழ்வின் வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில், குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான லசித் சேனாநாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “REIGNITE வாடிக்கையாளர் தினமானது, மகத்துவத்திற்கான எமது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். நாங்கள் சவால்களுக்கு மத்தியில் நிறுவனத்தை வழிநடத்தியுள்ளோம். மூலோபாய மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். இப்போது, நாங்கள் முன்னெப்போதையும் விட வலுவாக இருக்கிறோம். இந்த நிகழ்வு Swedish Trading Company நிறுவனத்திற்கும், பரந்த குழுமத்திற்கும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இங்கு புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவை பயணத்தின் மையமாக உள்ளன. எதிர்காலத்தில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து வளர்ச்சி காண நாங்கள் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

REIGNITE இன் மையப் புள்ளியாக GA VSDˢ என்ற Atlas Copco இன் அதிநவீன காற்று அமுக்கி (air compressor) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மூன்றாம் தலைமுறை அமுக்கி, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான சான்றாகும். நிலையான வேக அமுக்கிகளுடன் ஒப்பிடும்போது 60% வரை எரிசக்தி சேமிப்பை இது வழங்குகிறது. இதனுடன், Atlas Copco, SKF மற்றும் Xylem உள்ளிட்ட Swedish Trading Company மற்றும் General Sales Company ஆகியவற்றின் ஆடையணிகள், தேயிலை, இறப்பர் மற்றும் மருந்துகள் முதல் தண்ணீர், மின்சாரம் மற்றும் புகையிரதங்கள் வரை பல்வேறு தொழில் துறைகளில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதில் குழுமத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

Swedish Trading மற்றும் அவற்றின் பிரதான வழங்குநர்களான Atlas Copco மற்றும் SKF ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால உறவு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்ட 1982 இல் இருந்து தொடங்கியதுடன், இது நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டது. Atlas Copco மற்றும் SKF ஆகியவை அந்தந்த துறைகளில் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Atlas Copco அமுக்கப்பட்ட காற்று மற்றும் எரிவாயு, கைத்தொழில் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் vacuum தீர்வுகளுக்கு உலகளவில் புகழ்பெற்றது. அதே நேரத்தில் தாங்கு உருளைகள் (bearing) மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளுக்காக SKF புகழ்பெற்றுள்ளது. வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அவர்களின் அறிவு மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் விசேட பயிற்சி அமர்வொன்றும் நடத்தப்பட்டது.

General Sales Company ஆனது, ISO 9001:2015 தர முகாமைத்துவ கட்டமைப்புகளுக்கான சான்று அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், இலங்கையில் CIDA ஆல் வழங்கப்படும் ICTAD EM-2 பிரிவின் கீழ் தரச் சான்றளிக்கப்பட்டது, நீர் மற்றும் கழிவு நீர் துறைகளில் பாய்ச்சுதல், பரிமாற்றம், சுத்திகரிப்பு, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட 40 ஆண்டுகால நிபுணத்துவத்தை இந்நிறுவனம் வெளிப்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள S&P 500 பட்டியலிடப்பட்ட நிறுவனமான Xylem இந்நிறுவனத்தின் பிரதான வழங்குநர் என்பதுடன், குறைந்த எரிசக்தியைப் பயன்படுத்தும் புத்தாக்கமான தீர்வுகளுடன், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் நிலைபேறாண்மை முயற்சிகளை ஆதரிக்கும் புத்தாக்கமான தீர்வுகள் மூலம் நீர் சுழற்சி முழுவதும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் மூலம் புத்தாக்கமான நீர் தீர்வுகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், தண்ணீரை அணுகக்கூடியதாகவும், கட்டுபடியானதாகவும், அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Swedish Trading Audio Visual நிறுவனம் ISO சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள சாதனையை அங்கீகரிக்கும் ஒரு விசேட வைபவமும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. audio visual தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான மகத்துவத்தை வெளிப்படுத்தியது.

அதன்படி, Swedish Trading Audio Visual தற்போது ISO 9001:2015 தர முகாமைத்துவக் கட்டமைப்புகளுக்கான சான்று அங்கீகாரமளிக்கப்பட்டு, இலங்கையில் CIDA வழங்கும் ICTAD EM-2  பிரிவின் கீழ் தரப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறையில் முன்னோடி நிறுவனமான Swedish Trading Audio Visual, இலங்கையில் ELV, audio visual சந்தையில் சந்தேகத்திற்கு இடமின்றி முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக, REIGNITE ஆனது தொழில்துறைத் தலைவர்கள், கூட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் ஒன்றிணைந்த சந்திப்பைக் கண்டது. இது தயாரிப்புகளை மட்டுமல்லாது, எதிர்காலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட குறிக்கோளையும் காட்சிப்படுத்தியது. நிகழ்வில் Swedish Trading Company, Swedish Trading Audio Visual மற்றும் General Sales Company ஆகியவை புத்தாக்கம், அர்ப்பணிப்பு மற்றும் மகத்துவத்திற்கான புத்தெழுச்சியுடன் தொடர்ந்து முன்னணியில் திகழ்வதற்கான சாட்சியாக இந்நிகழ்வு அமைந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT