Tuesday, March 21, 2017 - 10:15am
ஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவு உறுப்பினருக்கு எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) இரவு கைதான குறித்த நபரை இன்று (21) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
கீத் நொயார் தாக்குதல்; புலனாய்வு உறுப்பினர் கைது
இதுவரை 06 பேர் கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி, கீத் நொயாரின் தெஹிவளை பிரதேசத்திலுள்ள வீட்டின் முன்புறமாக வேன் ஒன்றில் வந்த இனம்தெரியாதோர், ஆயுதத்தை காண்பித்து, மேற்கொண்ட தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு கைது செய்யப்பட்ட 34 வயதான குறித்த மினுவங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர், புலனாய்வுப் பிரிவிலிருந்து தப்பிச் சென்றவரென்று பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபரை இன்றைய தினம் (21) கல்கிஸ்ஸை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, இராணுவ மேஜர் இருவர் உள்ளிட்ட, மூன்று இராணுவ உத்தியோகத்தர்களும், பெப்ரவரி 19 ஆம் திகதி மேலும் இரு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment