ஜனாதிபதி விருதுக்கான கைப்பணிக் கண்காட்சி | தினகரன்

ஜனாதிபதி விருதுக்கான கைப்பணிக் கண்காட்சி

இலங்கை கைப்பணி கைவினைஞர்களின் கரங்களால் வடிவமைக்கப்பட்ட விலைமதிப்பற்ற படைப்புகளை வெளிக்கொணரும்'சில்ப அபிமானி- 2018' ஜனாதிபதி விருது கைப்பணிக் கைத்தொழில் போட்டி மற்றும் கண்காட்சி எதிர்வரும் 12,13,14,15,16 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் சபாயா,பெங்கட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்துள்ள 'சில்ப அபிமானி- 2018' கண்காட்சி 12 ஆம் திகதி பி.ப 3 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வைபவத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்வர்.

பல்லாயிரம் ஆண்டு கால புகழ்மிக்க பழைமையான வரலாற்றுக்கு உரிமை கோருகின்ற இலங்கையின் கைப்பணி கைவேலைகள் மற்றும் கைப்பணி கலைத்திறன்களைப் பேணிப் பாதுகாத்து,அபிவிருத்தி செய்து கைவினைஞர்களின் பொருளாதார மற்றும் சமூகநிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவை தாபிக்கப்பட்டுள்ளது.

'சில்ப அபிமானி- 2018' போட்டியொன்று மாத்திரமின்றி மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஓர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமாகும். அதன் முதலாம் கட்டமாக இலங்கையின் 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் அறிவூட்டல் பயிற்சிச் செயலமர்வுகள் நடத்தப்பட்டன. அதன் மூலம் கைவினைஞர்களின் படைப்பாற்றல்களை விருத்தி செய்தல், புதியவடிவமைப்புக்களை அறிமுகம் செய்தல் என்பன மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி படைப்புகளிலிருந்து அதிசிறந்த இரண்டு படைப்புகள் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமல்லாத பிரிவின் கீழ் தங்க விருதுக்காகத் தெரிவு செய்யப்படும். அவ்வாறே பிரிவு மட்டத்தில் தெரிவு செய்யப்படும் 21ஆக்கங்களுக்குவெள்ளிவிருதும்,தேசிய முதலாம்,இரண்டாம், மூன்றாம் மற்றும் திறமைவிருதுகளும் வழங்கப்படும்.

தங்கவிருதுகள் இரண்டுக்காக 500000 ரூபா வீதமும்,வெள்ளி விருதுக்காக 50000 - வீதமும் பரிசு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கைப்பணிக் கைத்தொழில் உற்பத்திகளுக்கு காணப்படுகின்ற சந்தை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வாக கைவினைஞர்கள் நேரடியாக அவர்களுடைய உற்பத்திகளை நுகர்வாளர்களுக்கு விற்பனை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்காக 110விற்பனைக் கூடங்களை கைவினைஞர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படிவிற்பனைக் கூடங்களில் பத்திக்,ரேந்தை,எம்ரொயிடர்,பெச்வேர்க்,வெள்ளிஆபரணங்கள்,பித்தளைப் பொருட்கள்,லக்சா,அலங்கார மட்பாண்டப் பொருட்கள், இசைக்கருவிகள்,தும்பரவடிவம்;,பன் மற்றும் பனையோலைப் பொருட்கள்,பிரம்பு மற்றும் மூங்கில்,முகமூடிகள்,கைப்பின்னல் நெசவு உற்பத்திகள்,மரப்பலகை செதுக்கல் வேலைப்பாடுகள்,உள்நாட்டுஉணவு வகைகள் உள்ளடங்குகின்றன.

'சில்ப அபிமானி- 2018' ஐ பார்வையிடுவதற்காக வருகை தருகின்ற பார்வையாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கைப்பணிப் பொருட்கள் தொடர்பான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச கைப்பணிவிழாவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக வெ ளிநாடுகளிலிருந்து 25கைவினைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கலாசார அடையாளங்களை வெளிக்காட்டுகின்ற கலைகள் மற்றும் அதனோடு இணைந்து காணப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலாசார அம்சங்கள் அடங்கிய கலாசார நிகழ்வொன்றும் பார்வையாளர்களின் ரசனைக்காக 12ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை தினமும் மாலை வேளையில் நடாத்தப்படவுள்ளது. இதற்காக டவர் மண்டப திரையரங்க மன்றம் ,அம்பலாங்கொடை பிரதிமை கண்காட்சி,இலங்கை பொலிஸ் கலாசார குழு மற்றும் இந்திய கலாசார குழுக்கள் என்பன கலந்து கொள்ளவுள்ளன.

மத்தியமாகாண கண்காட்சி தினமான 13 ஆம் திகதி மேலைத்தேய நடன நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது.

கண்காட்சி தினமும் மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.8.00மணிவரை நடைபெறவுள்ளது.

நிஷான்த விஜயலத்
உதவிப் பணிப்பாளர்,
தேசிய அருங்கலைகள் பேரவை 


Add new comment

Or log in with...