2017 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு (LIVE) (UPDATE) | தினகரன்

2017 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு (LIVE) (UPDATE)

 

கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கான பரீட்சை முடிவுகள் இன்று (29) காலை 10 மணியின் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் மாத்திரம், பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைகள் கிளையில் வழங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள், இன்று (29) தபாலில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட பரீட்சாத்திகளின் முடிவுகள் ஓரிரு தினங்களில் அனுப்பி வைக்கப்படும் என, பரீட்சைகளில் திணைக்களம் சுட்டி காட்டியுள்ளது.

வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 73.05% ஆனோர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தையும் 9 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பான மேல் திருத்தங்களை மேற்கொள்ள, பாடசாலை மாணவர்கள் ஏப்ரல் 7ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.


பரீட்சை முடிவுகள் www.doenets.lk இணையத்தளத்தில் (Mar 28, 23.11pm)
 
அல்லது கீழே உள்ள கூட்டில் உங்களது சுட்டிலக்கத்தை வழங்குவதன் மூலம் இங்கே பார்வையிட முடியும்.
 
அல்லது கையடக்க தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள EXAM இடைவெளி OL இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
 
அல்லது அனைத்துவிதமான கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிய EXAMS இடைவெளி சுட்டெண்ணை டைப் செய்து 
 
7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch
 

மேற்குறிப்பிட்ட வலையமைப்புகளின்  இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.

கடந்த வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.

நாடு முழுவதிலுமுள்ள 5,116 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சையில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சைகளின்போது தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் பாவனை உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்பில் 969 பரீட்சாத்திகளின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add new comment

Or log in with...