இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை | தினகரன்

இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை

இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை-Weather-Rain in East-North-North Central-Uva-Central

 

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (09) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு, வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பான, வளிமண்டல நிலை காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (10) வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக ஒரு சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் (5cm) அதிக மழை பொழிவதற்கு வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, காற்றின் வேகம் தற்காலிகமாக உயர்வடையலாம் எனவும், இடி மின்னலிலிருந்து பாதுகாப்பு பெறுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
 


Add new comment

Or log in with...