களத்தடுப்பு பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் | தினகரன்


களத்தடுப்பு பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் அலக்ஸ்டயர் குக்கை 4-1 என்ற வெற்றிக் கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இங்கிலாந்தில் மூன்றில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

இதற்கிடையே, இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலக்ஸ்டயர் குக் ஓய்வு பெறுகிறார்.33 வயதான குக் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 160 டெஸ்டில் விளையாடி 12,254 ஓட்டங்களை எடுத்துள்ளார். 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். சராசரி 44.88 ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ஒட்டங்கள் குவித்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் அலக்ஸ்டயர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வாரம் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான வாரமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக நிறைய போட்டிகளில் விளையாடிய வீரர் ஓய்வு பெறுவது எங்களுக்கு பெரிய இழப்பாகும்.

ஓய்வுபெறும் அலஸ்டயர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்ப முடிவு செய்துள்ளோம். அதையே இலக்காக கொண்டு இந்த போட்டியில் விளையாட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...