பிரேசில் அணியின் தலைவராக நெய்மார் | தினகரன்

பிரேசில் அணியின் தலைவராக நெய்மார்

பிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர தலைவராக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடும் நெய்மார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மார் தற்போதைய காலத்தில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். பாசிலோனா அணிக்காக விளையாடிய நெய்மர் தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் பிரேசில் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக அவர் தலைவர் பதவியை ஏற்கவில்லை. ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ணத்தில் கூட சில்வா, மார்சிலோ ஆகியோர் தலைவராக செயல்பட்டனர். இந்நிலையில் நெய்மர் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...