Thursday, March 28, 2024
Home » இலங்கையில் பயணிகள் வாகன வணிகத்திற்கான கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட BYD மற்றும் ஜோன் கீல்ஸ்

இலங்கையில் பயணிகள் வாகன வணிகத்திற்கான கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட BYD மற்றும் ஜோன் கீல்ஸ்

by Rizwan Segu Mohideen
November 23, 2023 11:19 am 0 comment

உலகின் முன்னனி புதிய ஆற்றல் வாகன (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD ஆனது இலங்கையில் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களை (New Energy Vehicle) வழங்குவதற்காக ஒரு கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது 

ஷென்ஜெனில் உள்ள BYDஇன் உலக தலைமையகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் BYD ஆசியபசுபிக் வாகன விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் லியூ ஷுயெலியாங் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் . கிரிஷான் பாலேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய லியூ ஷுயெலியாங், “இலங்கையில் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனத்தை எங்கள் உலக தலைமையகத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 28 ஆண்டுகளில், BYD தொழில்நுட்ப புத்தாக்கத்துக்கான தனது உறுதிப்பாட்டிலும், அதன் பசுமை கனவிலும் உறுதியாக இருந்து வருகிறதுபல்வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் சூழல் பற்றிய அக்கறையுடனான போக்குவரத்து முறைகளையும் உலகளாவிய ரீதியில் இணைக்க முற்பட்டு வருகிறோம். இந்த கூட்டு உடன்படிக்கையின் மூலம், இலங்கை மக்களுக்கு, மேம்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் வாகனங்களை வழங்க முடிவதோடு, மக்களின் அன்றாட வாழ்வில் ‘மின்சார வாகனத்தை‘ ‘அத்தியாவசிய வாகனமாகஆக்கும் எமது குறிக்கோளை அடைய வழிகோலும்.” என தெரிவித்தார்.

இந்த உணர்வை எதிரொலித்து, நிலைத்தன்மைக்கான (Sustainability) அவர்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா கூறியதாவது: “ESG ஆனது எங்களது வணிகச் செயல்முறையில், நிறுவன கலாச்சாரத்தில் மற்றும் சமூகத்துடனான தொடர்பு ஆகியவற்றில் உறுதியாக வேரூன்றியுள்ளது. நாட்டின் நிலையான எதிர்காலத்தை அடைவதற்கான எங்கள் உறுதிப்பாட்டோடு, BYD உடனான கூட்டு உடன்படிக்கையானது தர காத்க்கும் அற்புதமான வாய்ப்புகளை நாங்கள் எதிர்பார்த்க்கின்றோம். இந்த கூட்டு உடன்படிக்கை மூலம், மேம்பட்ட புதிய ஆற்றல் வாகன ங்களை (New Energy Vehicles) இலங்கைக்கு கொண்டு வருவதோடு, எங்கள் மக்கள் உலகின் முன்னணி தொழில்நுட்பமான NEV அனுபவிக்கவும், சூழலுக்கு ஏற்புடையதும், நிலைத்தன்மையான இலங்கையை உருவாக்கவும் பங்களிப்பு செய்யும்”.   

புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் பல தசாப்தங்கள் கடுமையாக உழைத்த பிறகு, புதிய ஆற்றல் வாகனங்களின் (New Energy Vehicle) முழு தொழில்துறை சார் சங்கிலியின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பட்டரிகள், மின்சார மோட்டர்கள் மற்றும் மின்னணு கட்டுப்படுத்தி உள்ளிட்டவற்றில் BYD மேம்பட்ட நிபுணத்துவத்தை எட்டியுள்ளது.  

மேலும் BYD, அதன் Powertrain Systems, பவர் பட்டரிகள், டிரைவ் மோட்டார்கள் மற்றும் மோட்டார் கட்டுப்படுத்தி சிஸ்டம்கள் ஆகியவற்றை சுயாதீனமாக உருவாக்கி உலகளாவிய ரீதியில் புதிய ஆற்றல் வாகனகளின் (New Energy Vehicle) ஒரே உற்பத்தியாளராக தனித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, BYD இன் புதிய ஆற்றல் வாகனங்கள் 6 கண்டங்களிலும், 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும், 400க்கும் மேற்பட்ட நகரங்களிலும் வியாபித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும், BYD உலகளவில் 1.86 மில்லியனுக்கும் அதிகமான புதிய ஆற்றல் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, 2023 ஆகஸ்ட் 9ம் திகதியன்று, BYD தனது உற்பத்தியிலிருந்து 5 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை (New Energy Vehicle) உருவாக்கிய உலகின் முதல் வாகன உற்பத்தியாளராகவும் மாறியது

JKH தொடர்பில்
JKH, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய குழும நிறுவனமாவதோடு, 7 வேறுபட்ட தொழில் ரீதியான துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 15,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு, LMD பத்திரிகையால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்என்ற தரவரிசையில் இடம்பெற்று வருகிறது.  வெளிப்படைத் தன்மைக்கான சர்வதேச இலங்கை நிறுவனத்தின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டின் வெளிப்படைத் தன்மைமதிப்பீட்டில் ஜோன் கீல்ஸ் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது.  உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபை உலக ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருப்பதுடன், ஜோன் கீல்ஸ் ஆனது தனது சமூக நல குறிக்கோளான “நாளைக்கான தேசத்தை வலுப்படுத்துதல்” – என்பதை அதன் அறக்கட்டளை மற்றும் சமூக தொழில் முனைவோர் முயற்சியின் மூலம் அடைய எத்தணித்து வருகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தினால் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதற்கு ஊக்கியாக விளங்கும் ‘பிளாஸ்டிக் சைக்கிள்முயற்சியானதும் இயக்கப்படுகிறது

BYD தொடர்பில்
BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD, தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளை கொண்டுள்ளது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பிலிருந்து அதன் பயன்பாடுகள் வரை, BYD ஆனது முழு அர்பணத்துடன் எரிபொருள்கள் மீதான காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் தீர்வுகளை வழங்கி உலகளாவிய ரீதியில் புதைபடிவ எரிபொருட்கள் மீதான தங்கியிருத்தலை குறைத்துள்ளது. அதன் புதிய ஆற்றல் வாகன தடயமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், மற்றும் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.bydglobal.com பார்வையிடவும்

BYD Auto தொடர்பில்
2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட BYD Auto, சிறந்த வாழ்க்கைக்கான தொழில்நுட்ப புத்தாக்கங்களை பயன்படுத்துவதற்கு அர்ப்பணித்துள்ள ஒரு பன்னாட்டு உயர்தொழில்நுட்ப நிறுவனமான BYD இன் வாகன துணை நிறுவனம் ஆகும். உலகளாவிய போக்குவரத்துத் துறையின் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், BYD Auto தூய மின்சார மற்றும் Plug-in hybrid வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. புதிய ஆற்றல் வாகனங்களின் முழு தொழில்துறை சங்கிலியின் முக்கிய தொழில்நுட்பங்களான பேட்டரிகள், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்னணு கட்டுப்படுத்தி ஆகியவற்றில் இந்த நிறுவனம் தேர்ச்சி பெற்றுள்ளது. சமீப ஆண்டுகளில், Blade Battery, DM-i Super Hybrid தொழில்நுட்பம், ePlatform 3.0, CTB தொழில்நுட்பம், e⁴ Platform, BYD DiSus Intelligent Body Control System மற்றும் DMO Super Hybrid System ஆகியவை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. EV மாற்றத்தில் படிம எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்திய உலகின் முதல் கார் தயாரிப்பாளராகும். மேலும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக சீனாவில் புதிய ஆற்றல் பயணிகள் வாகன விற்பனையில் முதலிடத்திலும் உள்ளது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT