பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை; தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை | தினகரன்


பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை; தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் முடித்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை இருக்கும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என ஜெயகுமார் கூறினார்.


Add new comment

Or log in with...