Tuesday, March 19, 2024
Home » Hemas Ambulatory Surgical Care: சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதி

Hemas Ambulatory Surgical Care: சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதி

- குறைந்த செலவில், விரைவாக குணமடையும் சேவை

by Rizwan Segu Mohideen
November 24, 2023 11:47 am 0 comment

இலங்கையில் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு மீள் வரைவிலக்கணம் வகுக்கும் வகையில், நோயாளர்கள் அதிநவீன சத்திர சிகிச்சைகளின் பின்னர், அதே நாளில் வீடு திரும்பி, விரைவாக, சிறப்பாக மற்றும் மிகுந்த சௌகரியத்துடன் குணமடைவதற்கு இடமளிக்கும் முறையை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் புதிய முயற்சியான ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழங்கும் சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதியுடன் (Hemas Ambulatory Surgical Care) அதிசிறந்த சத்திர சிகிச்சை தொழில்நுட்பங்கள் மூலமாக தற்போது இவ்வசதி கிடைக்கின்றது.    

முதல்முறையாக கிடைக்கின்ற இச்சேவை, சத்திர சிகிச்சை நடைமுறைகளில் இலங்கை மக்களின் அனுபவங்களை மாற்றியமைத்து, கூடுதல் சௌகரியம், செலவுச் சிக்கனம் மற்றும் மிக முக்கியமாக தனித்துவமான வகையில் நோயாளரை மையப்படுத்திய அணுகுமுறையை வழங்குகின்றது.

இது தொடர்பில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் ஆய்வுகூடங்கள் சங்கிலியின் முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி லகித் பீரிஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நிபுணத்துவம் வாய்ந்த வீட்டுப் பராமரிப்பு மருத்துவ அணியின் உதவியுடன், பழக்கமான சூழலில், நோயாளர்கள் தங்கள் வீட்டின் சௌகரியத்துடன் விரைவாக குணமடைவதாக அறியப்படுகிறது.  ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழங்கும் சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதியுடன், சிறிய சத்திர சிகிச்சைகள் முதல் மேம்பட்ட சத்திர சிகிச்சைகள் வரை, இரவில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமின்றி நோயாளிகள் பரந்த அளவிலான சத்திர சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள உதவுகிறது. அதாவது நோயாளிகள் தங்கள் சத்திர சிகிச்சையின் அதே நாளில் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் ஆறுதல் உள்ளதுடன்விரைவாக குணமடைவதை ஊக்குவிக்கிறது. வைத்தியசாலையில் தங்கியிருந்து இதே சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது ஏற்படுகின்ற செலவில் 30% ஐ குறைக்க தற்போது இவ்வசதி வழிகோலுவதால், நாட்டிலேயே செலவு குறைந்த வைத்தியசாலையாக  ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸை மாற்றியுள்ளது. இத்தகைய ஒரு விசேட வசதியை ஏற்பாடு செய்வதன் மூலம்வெளிநோயாளர் நடைமுறைகளின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்க முடியும். அதிநவீன உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் நோயாளியின் சிகிச்சையையும், குணமடைதலையும் மேம்படுத்தும் பாதுகாப்பான மற்றும் திறனுள்ள மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கான எங்கள் திறனை மேம்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டார்.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழங்கும் சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதியுடன், நோயாளிகளுக்கு மேம்பட்ட சத்திர சிகிச்சைகளை பாரம்பரிய உள்நோயாளர் நடைமுறைகளை விட 30% குறைவான செலவில் பெற்றுக்கொள்ள இடமளிக்கிறது. இதன் விளைவாக நோயாளர்கள் உச்ச கவனிப்புடன் செலவைக் குறைத்து, கட்டுபடியாகும் வகையில் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கின்றது.  அதிநவீன தொழில்நுட்பங்களை தங்குதடையின்றி ஒருங்கிணைத்து, அதிநவீன சத்திர சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வசதி தனித்துவம் பெற்றுள்ளது. நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்பில் அதிநவீன மேம்பாடுகளிலிருந்து பயனடைவதை இது உறுதி செய்கிறது.

சத்திர சிகிச்சைகள் அனைத்தும் Australian Council for Health Standards International (ACHSI) வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதுடன், அதியுயர் தரம் மற்றும் பாதுகாப்பு தராதரங்கள் உறுதி செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச ஊடுருவும் சத்திர சிகிச்சைகள் (MIS) மற்றும் உடல் வேதனை முகாமைத்துவம் ஆகியவற்றில் சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கப்பூரிலுள்ள அலெக்ஸான்ட்ரா வைத்தியசாலையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழங்கும் சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதி அதன் தனித்துவமான சிறப்பம்சமாகும். மேலும் அலெக்ஸான்ட்ரா வைத்தியசாலையின் MIS பிரிவு புகழ்மிக்க இலங்கை மருத்துவரான வைத்தியர் சுஜித் விஜேரத்ன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் அலெக்ஸான்ட்ரா ஹொஸ்பிட்டல்ஸ் ஆகிய இரு பெரு நிறுவனங்களின் ஒத்துழைப்பானது நல்லெண்ணம் கொண்ட ஒன்று என்பதுடன், அதிநவீன சத்திர சிகிச்சை புத்தாக்கங்களை அணுகி, தலைசிறந்த பராமரிப்புக்கு இடமளிப்பதுடன், இலங்கையில் மிகவும் கட்டுபடியான கட்டணங்களில் அதியுயர் தரத்தை வழங்குகின்றது.  

இலங்கையில் துரிதமான வழியிலான சத்திர சிகிச்சையை அறிமுகப்படுத்தி, அதிநவீன, நோயாளரை மையப்படுத்திய, மற்றும் செலவுச் சிக்கனமான தீர்வுகளுக்கு ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழங்கும் சத்திர சிகிச்சையை முடித்து அதே நாளில் வீடு திரும்பும் வசதி வழிவகுக்கின்றது.  

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் பற்றி
2008 ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் செயல்பட ஆரம்பித்த முதற்கொண்டே, இலங்கையின் முன்னணி சுகாதாரப் பராமரிப்பு ஸ்தாபனமாக எழுச்சி கண்டுள்ளது. ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வத்தளை மற்றும் தலவத்துகொடை ஆகிய இடங்களில் வைத்தியசாலைகளைக் கொண்டுள்ளதுடன், தரம், பாதுகாப்பு மற்றும் நோயாளர் கவனிப்பு ஆகியவற்றில் முன்மாதிரியான செயல்பாடுகளுடன், மேன்மையின் சின்னமாக மாறியுள்ளது. 

பல்வேறு துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள கூட்டு நிறுவனங்கள் குழுமமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், Australian Council on Healthcare Standards International (ACHSI) அடங்கலாக சர்வதேச அங்கீகாரங்களை சம்பாதித்துள்ளது மட்டுமன்றி, Integrated Management System (IMS) சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் முதல் ஸ்தாபனம் என்ற தனித்துவமான அந்தஸ்தையும் சுமக்கின்றது.  

மருத்துவ ஆய்வுகூடங்களின் விரிவான வலையமைப்பும், அர்ப்பணிப்புடன் வழங்கும் முழுமையான விசேட மருத்துவ சிகிச்சைகளையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பெற்றுக்கொள்ள முடிகின்ற, உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் தனது பயணத்தை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் சிறப்பாக முன்னெடுத்த வண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT