பிரிட்டனில் இரசாயன தாக்குதல்: இருவரது விபரங்கள் வெளியீடு | தினகரன்


பிரிட்டனில் இரசாயன தாக்குதல்: இருவரது விபரங்கள் வெளியீடு

பிரிட்டனின் சலிஸ்பரி நகரில் முன்னாள் ரஷ்ய உளவாளி சர்காய் ஸ்க்ரிபால் மீதும் அவரது மகள் யூலியா ஸ்க்ரிபால் மீதும் ரஷ்ய உளவாளிகள் இருவர் நச்சு இரசாயனத்தைப் பயன்படுத்தியதாக, பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லான் போஷிரோவ் ஆகிய அந்த இரு நபர்கள் மீதும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படும் என்று பிரிட்டனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், ரஷ்ய இராணுவத்தின் புலனாய்வுத் துறையில் பணிபுரிபவர்கள் என்று கூறிய தெரேசா மே, அந்தத் தாக்குதலுக்கு அவர்களது உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கலாம் என்று கூறினார்.

ஆனால், ரஷ்யா அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.


Add new comment

Or log in with...