கட்டாரில் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை சலுகை | தினகரன்


கட்டாரில் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை சலுகை

கட்டார் முதல் வளைகுடா அரபு நாடாக நீண்ட காலம் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்த குடியுரிமை வழங்கவுள்ளது.

கட்டார் அரசு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய சட்டம் ஒன்றில், ஒவ்வொரு ஆண்டும் 100 வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளது. அதேபோன்று பெரும்பான்மை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வெளியேறும் விசா இன்றி நட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது.

இந்த புதிய நிரந்தர குடியுரிமை சட்டத்தில், கட்டார் தாய்மார்களுக்கு பிறந்த குழந்தை மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் கட்டாரில் வசித்த வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தொழிற்திறமையும் கருத்தில் கொள்ளப்படவுள்ளது. கட்டாரில் சுமார் 2.7 மில்லியன் வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 90 வீதத்தினராகும்.

புதிய சட்டத்தின் கீழ், நிரந்த குடியுரிமையாளர்களுக்கும் கட்டார் பிரஜைகளுக்கான இலவச மருத்துவம், அரச பாடசாலைகளில் இலவச கல்வி உட்பட அதே சமூக பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. அரச தொழில்வாய்ப்புகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...