காபுல் விளையாட்டு கழகத்தில் தற்கொலை குண்டு: 20 பேர் பலி | தினகரன்

காபுல் விளையாட்டு கழகத்தில் தற்கொலை குண்டு: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருக்கும் மல்யுத்த கழகம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை தற்கொலை தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டு மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

கழகத்திற்குள் இடம்பெற்ற தற்கொலை தாக்குலில் நால்வர் கொல்லப்பட்ட பின், சம்பவத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இரண்டாவது தற்கொலைதாரி கார் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார். இரண்டாவது குண்டு தாக்குதலில் டோலே செய்தி நிறுவனத்தின் இரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டதோடு மேலும் நால்வர் காயமடைந்தனர்.

தலைநகரில் ஷியா பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குலுக்கு எவரும் பொறுப்பேற்காதபோதும், இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழு டாஷ்த் ஈ பார்ச்சி மாவட்டத்தில் இதற்கு முன்னரும் இதேபோன்ற தாக்குதலை நடத்தியுள்ளது.


Add new comment

Or log in with...