சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட, சிறுநீரக கல் தொடர்பான சத்திரசிகிச்சையின் பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
குறித்த சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்பட்டுள்ள, சிறுநீர் அசாதாரண நிலை காரணமாக, இன்று (06) காலை, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 5 ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக, பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில், 6 வருடம் ஒத்தி வைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
Add new comment