வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி | தினகரன்

வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி

வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி-Fire at House in Boralesgamuwa Bellanwila-Lady Doctor Dies

வைத்திய நிபுணரான கணவர் மற்றும் குழந்தைக்கு காயம்

வீடொன்றில் ஏற்பட்ட தீயில் எரிந்த நிலையில் கர்ப்பிணி வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த தீ, சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என, பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று (06) பிற்பகல், பொரலஸ்கமுவ, பெல்லன்வில பிரதேசத்திலுள்ள இரு மாடி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீயினால் அவ்வீட்டிலிருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி-Fire at House in Boralesgamuwa Bellanwila-Lady Doctor Dies

பொராலஸ்கமுவ, பெல்லன்வில, ஶ்ரீ சோமரத்ன மாவத்தையிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதோடு, இச்சம்பவத்தில் 37 வயதான விதர்ஷி டயஸ் எனும் கர்ப்பிணி பெண் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண், ஹொரணை அரச வைத்தியசாலையில் பணி புரிந்தவர் என்பதோடு, தற்போது அங்கிருந்து விலகியுள்ளதோடு, மரணமடையும் நிலையில் அவர் கர்ப்பமுற்றிருந்ததாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி-Fire at House in Boralesgamuwa Bellanwila-Lady Doctor Dies

குறித்த பெண்ணின் கணவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் விசேட கண் வைத்திய நிபுணர் என்பதோடு, தீயினால் காயமடைந்த அவரும் அவரது 5 வயது ஆண் குழந்தையும், தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியர், அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது குழந்தைக்கு பாரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என, வைத்தியசாலை பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி-Fire at House in Boralesgamuwa Bellanwila-Lady Doctor Dies

தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் இது வரை தெரியவில்லை எனவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி-Fire at House in Boralesgamuwa Bellanwila-Lady Doctor Dies

Add new comment

Or log in with...