யாழ். வலிகாமம் குரும்பசிட்டியில் 12.5 ஏக்கர் காணி, ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் மற்றும் மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம் என்பன நேற்று (06) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டன.
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி, பாடசாலைகளைக் கையளிப்பதற்கான ஆவணங்களை அரசாங்க அதிபர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந் நிகழ்வில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி,வடமாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் உட்பட கலைமகள் பாடசாலை சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
யாழ். குறூப் , பருத்தித்துறை நிருபர்கள்
Add new comment