மேகங்கருக்கையிலே பாடலை பாடிய நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்! | தினகரன்

மேகங்கருக்கையிலே பாடலை பாடிய நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்!

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் காலமானார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் வெள்ளை சுப்பையா.

இவர் கோவை அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர். ஜெய்சங்கர் நடித்த மாணவன் படத்தில் அறிமுகமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் மேகங்கருக்கையிலே பாடலை திரையில் பாடியது இவர்தான்.

சமீபகாலமாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். 2014-ம் வருடம் தன்னுடைய புற்று நோய் சிகிச்சைக்கான செலவுக்கு அரசு உதவவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

உடல்நலக்குறைவின்றி இருந்த சுப்பையாவைக் கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி, நேற்று முன்தினமிரவு காலமானார். அவருக்கு வயது 78. அவருக்கு சாவித்திரி என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளார்கள்.


Add new comment

Or log in with...