மக்கள் பலம் ஆர்ப்பாட்டம் தோல்வி | தினகரன்

மக்கள் பலம் ஆர்ப்பாட்டம் தோல்வி

'மக்கள் பலம் கொழும்பு' ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

மக்கள் பலம் ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்திருப்பினும் இளம் அரசியல்வாதியாக நாமல் ராஜபக்ஷ இதனை நடத்த முன்வந்தமைக்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த முறையும் மைத்திரிபால சிறிசேனவே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...