ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் ஒரே வாரத்தில் 87 யானைகள் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபிரிக்காவின் உயிரியல் ஆய்வாளரான மைக் சேஸ் என்பவர் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வு நடத்திய போது, போட்ஸ்வானா நாட்டின் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் யானைகள் கொல்லப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த யானைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் தந்தம் அறுத்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதன்படி 87 யானைகளும், 3 காண்டாமிருகங்களும் கொல்லப்பட்டு கிடந்தன. இந்தச் சம்பவம் உயிரியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மிகப்பெரிய யானைத் தொகை கொண்ட நாடாக போட்ஸ்வானா இருந்தபோதும், யானைத் தந்தத்திற்காக வேட்டையாடுபவர்கள் எல்லை தாண்டி நாட்டுக்குள் ஊடுருவி வருகின்றனர்.
Add new comment