அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு | தினகரன்

அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு

அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு-15 million High Dosage-Tramadol Found at Colombo Yard

கொழும்பு துறைமுகத்திலிருந்த கொள்கலன் (Container) ஒன்றிலிருந்து அதி செறிவைக் கொண்ட (High-dose) போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

585 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட Tremadol, 225mg எனும் அதி செறிவைக் கொண்ட ஒரு கோடி 50 இலட்சத்து 50,170 (15,050,170) மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு-15 million High Dosage-Tramadol Found at Colombo Yard

பொலிஸ் போதைப்பொருள் பிரிவு தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (05) பிற்பகல் மேற்கொண்ட சோதனையின் போது குறித் கொள்கலனிலிருந்து இம்மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கொழும்பினூடாக லிபியாவிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக இக்கொள்கலன் அனுப்பப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு-15 million High Dosage-Tramadol Found at Colombo Yard

குறித்த மாத்திரைகளின் பெறுமதியை சரியாக கணிக்க முடியாதுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த கொள்கலன் தற்போது சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு-15 million High Dosage-Tramadol Found at Colombo Yard

அதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு-15 million High Dosage-Tramadol Found at Colombo Yard

Add new comment

Or log in with...