கோரமின்மை காரணமாக பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு | தினகரன்

கோரமின்மை காரணமாக பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

கோரமின்மை காரணமாக பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு-No Quorum Parliament Adjourned Till Tomorrow

 

பாராளுமன்றத்தில் உரிய அளவிலான உறுப்பினர்கள் சமூகம் தராததன் காரணமாக, பாராளுமன்றம் நாளை (07) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது. முதலில் வாய்மொழி மூலமான பதிலுக்கான கேள்விக்கான நேரம் ஆரம்பமாக இருந்த வேளையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன, எழுந்து நின்று, கோரமின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார்.

சபாநாயகர் உள்ளிட்ட மொத்தமாக 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய அமர்வின்போது சுமார் 17 எம்.பிக்களுக்கும் குறைவான எம்.பிக்களே சமூகமளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...