உயிர்ப் பலி கொடுத்து ஆட்சிக்கு வரும் அவசரம் | தினகரன்


உயிர்ப் பலி கொடுத்து ஆட்சிக்கு வரும் அவசரம்

ஆதரவாளர்களுக்கு நடு வீதி;  தலைவர்களுக்கு  நட்சத்திர ஹோட்டல்

சில மாதங்களிலோ ஒரு வருடத்திலோ தங்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனையை உணர்ந்தே உயிர்ப்பலி கொடுத்து சவப்பெட்டி மேல் ஆட்சிக்கு வரும் அவசரம் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஏற்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார ஜயமஹ தெரிவித்தார்.

ஆதரவாளர்களுக்கு 150 ரூபா சாப்பாட்டு பொதிகளை வழங்கி வீதியில் தங்க வைத்து விட்டு தலைவர்கள் ஜந்து நட்சத்திர ஹோட்டல்களில் சொகுசாக தங்க அறை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் அலுவலகக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நாம் இடையூறு செய்யவோ தடுக்கவோ மாட்டோம். ஆனால் மக்களுக்கு இடையூறோ தடங்களோ ஏற்படும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் செயற்பட வேண்டி

ஏற்படும்.பொதுச்சொத்துகளுக்கோ அரச உடமைகளுக்கோ சேதம் ஏற்படுத்தவோ அரச நிறுவனங்களுக்குள் பலவந்தமாக நுழையவோ முயன்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க நேரிடும். 400,-500 பஸ்களில் கூட்டம் அழைத்து வரப்பட்டாலும் குறைந்தளவு மக்களே வந்துள்ளன. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொழும்பில் தங்குவதாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை கைப்பற்றிவிட்டே திரும்பிச் செல்வதாக கூட கூறியுள்ளனர். இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்னர் ஆட்சியை வீழ்த்த என்ன தேவையிருக்கிறது. மக்களை கொலை செய்து முடக்கி இந்த அரசாங்கம் அநியாயம் செய்துள்ளதா? அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. சில மாதங்களிலோ ஒரு வருடத்திலோ தங்களுக்கு கிடைக்க இருக்கும் தண்டனையை உணர்ந்தே சிலரின் உயிரை பலிகொடுத்து சவப்பெட்டி மேல் ஆட்சிக்கு வரும் அவசரம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...