தென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை | தினகரன்


தென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை

பொதுக் கழிப்பறைகளில் கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க தென் கொரியத் தலைநகர் சோலில் இனி அன்றாடச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

உடை மாற்றுவதற்குப் பயன்படும் அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றில் இரகசியக் கெமராக்கள் பொருத்தப்படுவது அந்நாட்டில் கடுமையான பிரச்சினையாக உள்ளது.

கெமராக்களை வைத்து எடுக்கப்படும் படங்களும் வீடியோக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பின்னர் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு அத்தகைய 6,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரகசியக் கெமராக்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு முன் கழிப்பறைகள் மாதத்துக்கு ஒருமுறை சோதிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டில் 5,400க்கும் மேற்பட்டோர் ரகசியக் கெமராக்கள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போதும் அவர்களில் 2 வீதத்தினருக்கு மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...